Written by Mithra, P Gayathri, S Gayathri | Vanavil Library Team
எல் எம் எஸ் எங்களினுடைய வாழ்க்கைக்கு ஒரு புதிய கதவை திறந்துள்ளது. பல்வேறு விதமான அனுபவங்கள் கற்றல் சிந்தனைகள் வளர்ச்சி புத்தகங்களை கையாளும் விதம் மாணவர்களை கையாளும் விதம் இவை யாவும் எங்களுக்கு மிகத் தெளிவாக கற்றுக் கொடுத்தது எல் எம் எஸ்.
ஒவ்வொரு எல்எம்எஸ் வகுப்பும் ஒருவிதமான நேர்மறையான எண்ணங்களையும் மகிழ்ச்சியான தருணங்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. முதலாவதாக எங்களினுடைய நூலகர் காயத்ரி எனக்கு இது பொருத்தமானதாக இருக்காது என்று நினைத்தார் ஆனால் இப்போது அவர் வானவில் நூலகத்தில் பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்து வருகிறார். காயத்ரி என்னிடம் கூறும்போது இப்போது நான் ஒரு நூலகராக வளர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றும் தெரிவிக்கிறார்.
நாங்கள் ஒவ்வொரு எல்எம்எஸ் வகுப்பிலும் கலந்து கொள்ளும்போது பல்வேறு விதமான கஷ்டங்கள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு இருக்கிறோம். எது தொடர்பாக என்றால் இணையம் சரியில்லாமல் இருப்பது அத்தோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு ஆங்கிலத்திலும் ஆங்கிலம் பேசுவதிலும் சிறு தயக்கம் இருந்தது அதை மேற்கொள்ளுவதுமே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு எல் எம் எஸ் வகுப்பிலும் எங்களினுடைய நிறுவனர் ரேவதி அவர்கள் எங்களுக்கு உதவி செய்தார் அதையும் தாண்டி அனந்திதா பிரித்தி சுஜாதா எங்களினுடைய ஒவ்வொரு எல்எம்எஸ் நபர்களுக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு எல்எம்எஸ் வகுப்பிற்கு முன்பும் எங்களுக்கு உன் சோதனையாக பல்வேறு விதமான செயல்பாடுகள் தரப்பட்டது அதை நாங்கள் மூவரும் கலந்து செய்யும்போது எங்களுக்குள் ஒரு குழு செயல்பாடும் உருவானது ஒவ்வொரு முன் சோதனையை செய்யும் போதும் எங்களுக்குள் இருந்த மகிழ்ச்சி நாங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் எல்லாம் இப்போது நினைக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேரடியான வகுப்பிற்கு கோவா செல்லும்போது எங்களினுடைய மிகப்பெரிய மறக்க முடியாத ஒரு பயணமாகாது அமைந்தது எங்களினுடைய சிறகுகளை விரித்து பல்வேறு விதமான புதிய மனிதர்களையும், புதிய இடங்களையும் பார்ப்பதற்கும் எல் எம் எஸ் எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருந்தது.
நேரடி வகுப்பிற்குப் பின் நாங்கள் எங்கள் வானவில் நூலகத்தினுடைய தோற்றத்தையே மாற்றி இருக்கிறோம் இப்போது எங்கள் என்னுடைய நூலகம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான இடமாக மாறி இருக்கிறது.
புத்தகங்களை வகைவாரியாக பிரிப்பது நூலகத்தை ஒரு சரியான முறையில் நடத்துவது இதுபோன்ற செயல்பாடுகளை எல்லாம் நாங்கள் எல்.எம்.எஸ் வகுப்பின் போது மட்டும் தான் கற்றுக்கொண்டோம் ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் செய்கிற பொழுது ஒவ்வொரு விதமான புதிய புதிய சிந்தனைகளையும் எங்களுக்கு எல் எம் எஸ் வழங்கி இருக்கிறது. இதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய அனுபவம் அட்மினிஸ்ட்ரேஷன் பற்றிய மீட்டிங் அனங்கத்தாவுடன் நடைபெற்றது மூன்று மாத காலம்.
இந்த சந்திப்பில் நாங்கள் ஏராளமான சந்தேகங்களையும் தொடர்ந்து கேள்விகளையும் அனந்திட்டாலும் கேட்டுக் கொண்டே இருப்போம் அதை இப்போது நினைக்கும் போதும் கூட நாங்கள் மூவரும் சிரித்துக் கொண்டே இருப்போம் ஆனால் அதிகமான கேள்விகளையும் அதிகமான பதில்களையும் எங்களுக்கு அனுமதித்தா கூறி இருக்கிறார். எங்களின் தலைமை ஆசிரியர் காயத்ரி கூறும் போது எல் எம் எஸ் வகுப்பிற்கு பின் எனக்கு புதிதாகவே ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது என்பதும் தெரிவித்தார்.
ஒவ்வொரு சமூக நூலகங்களிலும் அதாவது கம்யூனிட்டி நூலகங்களில் இருக்கக்கூடிய வளர்ச்சியும் நாங்கள் கலெக்ஷனை அதிகப்படுத்தி இருப்பதும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை மற்றவர்களுடன் பகிர்வதும் அதையும் தாண்டி தங்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை நூலகங்களில் செய்வதும் எல் எம் எஸ் வகுப்பின் போது நடைபெற்றது எல் எம் எஸ் முடிந்தாலும் கூட இது எங்களுக்கு ஒரு ஒரு புதிய முயற்சி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நூலகர் காயத்ரி கூறும் பொழுது எல் எம் எஸ் வகுப்பு எனக்கு புத்தகத்திற்கும் வாசி வாசகருக்கும் இடையே உள்ள தொடர்பை எல் எம் எஸ் வகுப்பு எனக்கு புரிய வைத்திருக்கிறது.
இப்போது நாங்கள் நூலகத்தை தனி ஒரு பிரிவாகவே பிரித்து செயல்பட ஆரம்பித்திருக்கிறோம் எங்களினுடைய அனுபவங்களையும் கற்றுக் கொண்ட விஷயங்களை ஒரு வார்த்தையால் கூறி விட முடியாது வாய்ப்பு வழங்கிய எல் எம் எஸ் டீமுக்கும் புக்வாமிற்கும் மிகப்பெரிய நன்றிகள் .
LMS Experiences: Wings of our Library
LMS has opened a new ‘gate’ of various experiences, learning thoughts, handling of books and students with a new perspective. Every LMS class enriched us with positive thoughts and happy moments.
Though our librarian Gayatri felt uncertain at first about this program because of language, she is now able to do various work at the Vanavil Rainbow library and feels happy about her climb as a librarian.
We used to experience pleasant troubles, but were a bit hesitant to converse in English but our head Revathi helped us and above all Anandita, Priti, Sujata were of immense help to all our LMS members.
We felt very happy when group activities which were given before every class came out successfully and we shared the happiness amongst ourselves.
LMS gave us a wonderful opportunity in our trip to Bookworm, Goa to meet new people and see new places.
After our virtual classes, we have given a facelift to our Rainbow library- a good arrangement, classification of books and good running of a library are the outcomes of our training~ a happy place between teachers and students.
A great experience was the mentoring meeting with Anandita for the admin tasks for 3 months. We cleared so many doubts and questions which make us laugh even now. Gayatri feels that a wonderful communication was built between books and readers. Infact, the library is now a new entity and functions on its own.